அவர்கள் வீட்டுப் பெண்டிரும் - நிலைமண்டில ஆசிரியப்பா

ஒழுகிசை அகவல் ஓசை உடைய
நிலைமண்டில ஆசிரியப்பா

இன்றைய நாட்களில் ஏளனம் செய்யவே
இறைவனின் உருவமே முதன்மையாய் ஆனதே
இதையும் நம்பியே ஒருவகை மனிதரால்
இனியதாய் கட்சிகள் நாத்திகம் பேசியதே

இறைவனின் இருப்பினை உணர்ந்த பலருமே
இலைமறை காயென இருந்து விட்டதால்
இடியொலி போலவே பேசிய பொய்யினால்
இல்லாக் கதையுமே உண்மைப் போலாச்சே

ஒரேவோர் மதத்தினை இழிவென பேசிய
ஒவ்வொரு நண்பரும் அம்மதம் சார்ந்தே
தன்னிலை உயர்த்தியே தரணியில் செழித்தே
தங்கமாய் ஒளியினை வீசியோர் உணர்வீரே

அவர்கள் வீட்டுப் பெண்டிரும் இறைவனின்
அடியையும் தொழுதே அற்புத நிலைபெற
அனுதினம் இறைஞினர் என்பதை கட்சியின்
அறிவுசார் தொண்டரும் அறிந்திட வாய்ப்புண்டோ

மாயயை பேசியே காசினை சேர்த்ததோர்
மானிட இழிகுண பாழின மனிதருள்
மகத்துவ பெருவாழ்வும் தாழ்நிலை அடையும்
மாசுறு நிலையினை மாற்றிட முயல்விரே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Jul-21, 8:24 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 35

மேலே