பாவையர்புரட்சி

என் மகளை
பெண் பார்க்க வந்தவன்
பொன் மகளும் கூட
வேண்டுமென்றான்..

மண் மகளை விற்று நான்
என் பெண் மகனோடு
பொன் மகளையும்
அனுப்பினால் அந்த
ஆண்மகன் என் மகளை
என் செய்வானோ என்று
கண் கலங்கி நின்றேன்..

கலங்கிய என் கண்ணீரை
என் மகள் துடைத்தாள்..
என் மனம் என் மணத்தை
விரும்பவில்லை,
நன்மகன் ஒருவன் வரும்வரை
என்றாள்..

புண்ணாகிப் புரையோடிய
சமுதாயத்தில்,
கண்ணான என் மகளை
எண்ணி இந்த மண் மீது
பெருமைப்பட நின்றேன்..
இது பசுமை ப் புரட்சியல்ல!
பாவையர் புரட்சி!

எழுதியவர் : ரோகிணி (2-Jul-21, 7:41 pm)
சேர்த்தது : Rohini
பார்வை : 53

மேலே