தனிமையின் தேடல்
அம்மாவின் திட்டல்
வார்த்தை களிலும்,
அப்பாவின் குத்தல்
பேச்சுகளிலும்,
கடன்கொடுத்த நண்பனின்
காரப்பேச்சுகளிலும்,
கானல்நீர காதலியின்
கடி சொற்களிலும்
என் தேடல் தனிமைதான்...
ஆறுதல் தர
இன்னொரு தாயாகவும்
தேறுதல் செய்ய
இன்னொரு தந்தையாகவும்
நட்புத் தர நல்ல
நண்பனாகவும்
காதல் செய்ய நல்ல
காதலியாகவும் இருந்தால்
இந்த தனிமை இனிமைதான்...
என் தேடலில் முகம்
புதைத்த தனிமை இப்போது
என் விடியலையும்
தேடிக் கொண்டிருக்கிறது
என்னுடன் சேர்ந்து...
_________________________________