விட்டில் பூச்சி
கேடு என
எச்சரிக்கை
செய்து விட்டு...
கேட்டை விற்க
அனுமதித்தது...
மதுவிலும் ...
புகையிலும் ...
சொர்க்கம்
என பலகை வைத்து...
நரகத்தில்
விழ வைப்பது
விபச்சாரம் ...
தொட்டால்
பணம் கொட்டும்
என விளம்பரம்
செய்து விட்டு...
தொட்டால்
கொட்டுமாம்...
சூதாட்டம்...
போலி விளம்பரம்
என்று...தெரிந்தும்
போலியில்
பலியாவது...
விளக்கு வெளிச்சத்தில்
மயங்கிய
விட்டில் பூச்சி...
தீயில் விழும்
பலிக்குச் சமம்.

