யார் பணக்காரன்
செல்வமிக்கவன்
பணக்காரன்....என்றால்...
போகும் போது
அதை ஏன் ...அவன்
எடுத்துச் செல்வதில்லை?...
சொத்திருப்போன்
பணக்காரன் என்றால் ....
செத்த பின்...
எந்த சொத்து
பின் செல்லும்?.....
உறவினர் கூட்டம்
பெரும் பணக்காரன்
என்றால் ...
போகும் போது
துணைக்கு வருவோர்
யாரோ?....
இருக்கும் போதே
கொடுத்து ...
பிறரால் பெற்ற
வாழ்த்துகள்...
மட்டுமே ....
கூட வருகிறது...
அதை அடைய
இன்றே
கொடுத்துப் பழகுவோம்.

