எப்படிச் செய்தாய்

ஐந்து ரூபாய்
தட்டில் இட்டு ....
இன்று தர்மமிட்டேன்...
என்று சொல்பவனும்
உண்டு ....

ஐந்தாயிரம் கொடுத்து
ஒரு ஏழையின்
கடனை...
அவருக்கே...
தந்தது யாரென்று ...
அறியாமல் ....
நீக்கியோரும் ... உண்டு.

சொல்லிக் காட்டும்
தர்மம் கூட...
பிறரைச்...செய்யத்
தூண்டும்....

சொல்லாமல்
செய்யும் தர்மம்...
உன்னையே தூண்டும்....
மேலும் மேலும்
செய்வதற்கு.

எழுதியவர் : PASALI (6-Jul-21, 5:38 am)
சேர்த்தது : PASALI
Tanglish : eppadich seythaay
பார்வை : 51

மேலே