நானும் என் விதியும்

விதி விளையாடும் இந்த வேலையிலே
என் மதி மயங்கிய இந்த நேரத்திலே
பல பல கேள்விகள் என் சிந்தையிலே
இந்த போரட்டத்தில் சிக்கி தவிக்கும் என் இதயத்திலே
சிதைந்து போனது என் கனவுகளே
இந்த விளையாட்டின் இறுதியிலே
தெரிந்துவிடும் முடிவினிலே
தோற்பது நீயாக இருக்கையிலே
மகிழ்ச்சியான வாழ்க்கையை நான் அடைகையிலே
நெகிழ்ச்சியில் பறப்பேன் ஆகசத்திலே
ஒருவேலை வெல்வது நீயாக இருக்கையிலே
மரணத்தை தழுவுவேன் படுக்கையிலே.

எழுதியவர் : கலைச்செல்வி கி (6-Jul-21, 3:47 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : naanum en vithiyum
பார்வை : 235

மேலே