தேனமுதப் புன்னகை செவ்விதழ்ப் பட்டினில் முத்துருள

கொட்டும் இமைகளில் மின்னல் வெட்டுது
சொட்டும் தேனமுத புன்னகை செவ்விதழ்ப்
பட்டினில் பாண்டிய நாட்டு முத்துருள
மெட்டொன் றையும் மெல்லிதழ் பாடுது !

-----இது கலி விருத்தம்

கொட்டும் இமைகளில் வெண்மின்னல் வெட்டுது
சொட்டிடும் தேனமுதப் புன்னகை செவ்விதழ்ப்
பட்டினில் பாண்டிய நாட்டுவெண் முத்துருள
மெட்டொன்றை யும்பா டுது !

--ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-21, 6:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே