ஒதுக்கி விடாதே!

*கவிதை ரசிகன்* படைப்பு....

உழைப்பு
இருக்கிறது என்று
சிக்கனத்தை
ஒதுக்கி விடாதே !

பணம்
இருக்கிறது என்று
மனிதர்களை
ஒதுக்கி விடாதே !

பதவி
இருக்கிறது என்று
கடமையை
ஒதுக்கி விடாதே !

வீடு
இருக்கிறது என்று
நாட்டை
ஒதுக்கி விடாதே !

அறிவு
இருக்கிறது என்று
பெரியோர் சொல்லை
ஒதுக்கி விடாதே!

அதிகாரம்
இருக்கிறது என்று
அடக்கத்தை
ஒதுக்கி விடாதே !

தைரியம்
இருக்கிறது என்று
பயத்தை ஒதுக்கி விடாதே !

துன்பமில்லை என்று
கடவுளை
ஒதுக்கி விடாதே !

ஒதுக்கியது எல்லாம்
ஒன்று சேர்ந்தால்
உன்னை
உலகத்தை விட்டே !
ஒதுக்கி விடும்....!


*கவிதை ரசிகன்*

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Jul-21, 8:40 pm)
பார்வை : 49

மேலே