வாழ்க வளமுடன்

இரத்த உறவுகளை பிரிந்து
புது ரத்த உறவுகளை
படைத்திட காத்திருக்கும் தம்பதியரே

சாத்திரங்கள் வேண்டாம்
சம்பிரதாயங்கள் வேண்டாம்
சரித்திரங்களும் வேண்டாம்

சமத்துவத்துடன் வாழுங்கள்
புரிந்து கொண்டு வாழுங்கள்
விட்டுக் கொடுத்து வாழுங்கள்

ஆயிரம் பிறையுடன் வாழுங்கள்
பெளர்ணமியாய் மகிழ்ந்து வாழுங்கள்
அமாவாசையையும் கடந்து வாழுங்கள்

எழுதியவர் : பெல்ழி (13-Jul-21, 11:58 am)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : vazhga valamudan
பார்வை : 102

மேலே