ஆணின் பிரசவ வேதனை
அழகிய பெண்ணை
கண்டவுடன் காதல்
மின்னலைப்போல்
கண்ணில் நுழைந்து
ஆண்களின் உள்ளத்தில்
பிறந்துவிடுகிறது ...!!
உள்ளத்தில் பிறந்த காதலை
உரியவளிடம் சொல்வதற்குள்
ஆண்கள் படுகின்றபாடு
இருக்கின்றதே ..அப்பப்பா..!!
பெண்கள் படுகின்ற
"பிரசவ வேதனை" யை
காட்டிலும் அதிகமான
மன வேதனையை
"பிரசவலி" போல்
அனுபவித்து விடுகிறார்கள்...!!
ஆனால்...
பெண்களோ
தங்களின் சம்மதத்தை
மௌனமாக விழி அசைவிலும்
இதழோர புன்னகையாலும்
மிக மென்மையாக
வெளிப்படுத்தி விட்டு
அமைதியாக
இருந்து விடுவார்கள் ...!!
--கோவை சுபா