காக்கும் கரங்கள்

காக்கும் கரங்கள்....


தீபங்கள் அணையா
வண்ணம் கைகோர்த்து...!
தீயினுக்கொரு இரையாகா
பூவுலகை கண்டோமே...!
நீயிதற்கு நன்றியொன்று
உரைக்கக் கடவாயோ...!
நீடூழிவாழ வாழ்த்திய
கைகளின்று மனிதர்களாய்....!

உயிரொன்று காத்திட
அரணாகி நின்று...!
மரணத்தின் வாயிலில்
சென்றுமீட்ட மீட்பாளிகள்...!
சுவாசத்தின் அளவுஎண்ணி அதற்குமோர் தீர்வுதந்து...!
தன்னுயிரை துச்சமாக எண்ணிய எம்மாடமருத்துவரே....!

போர்க்களத்தில் போர்
வீரனுக்கும் நம்பிக்கையிருக்கும்...!
உயிர் தப்பிக்க வழியேதேனும்
ஒன்று உண்டென்று...!
நீயிறங்கிய களமோ
போர்க்களமல்ல வைரஸ்களம்...!
உன்தில்லுக்கு எத்துனை நன்றியுரைத்துவிட முடியும்காவலரே....!

தாய்க்குநிகராய் ஓடியாடி
உழைத்து நேரமின்றி...!
அன்பு வொன்றையே அள்ளிக்கொடுத்து பண்பாய்...!
கால்கள் நோகலையோ
பூமித்தாய் சக்திகொடுக்கிறாளோ...?
நீயமர்ந்து பார்த்ததில்லை
பவித்திர செவிலியரே...!

வைரஸென்றும் கிருமியென்றும்
ஊர் ஒடுங்கியிருக்க...!
தூர்வார வைரஸானாலும் எமனானாலும் இங்கே...!
குவியலாய் காப்பாற்ற கிளம்பிய தூய்மைகாப்பான்கள்...!
உன்பாதங்களில் கண்கலங்கி நிற்கின்றதே சுத்தம்...!


இரத்தபந்தம் தேவையில்லை
உணவு கொடுக்க...!
மத்தபந்தம் எனக்கில்லை
சொல்லிக் கொடுக்க...!
சித்தபந்தம் கொண்ட
அவர்களுமே தேவதைகளாய்....!
தன்னார்வக் கோளாராய் உலகைக்காத்த தெய்வங்கள்...!

இவர்களின் ,
காக்கும் கரங்கள் இல்லையேல்...!
இன்றேது மனுடா உன்னுயிர்...?

ஸ்ரீவித்யாகலைவாணி
ஆற்காடு

எழுதியவர் : ஸ்ரீவித்யாகலைவாணி (15-Jul-21, 4:45 pm)
பார்வை : 518

மேலே