காமராஜர் பிறந்தநாள்
கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்
விருதுப்பட்டியிலே!
விடியலுக்கான
வித்து விழுந்தது!
சொத்து சுகம்
சேர்க்காமல் எல்லோருக்கும்
சொத்து ஆகியது!
கருப்புச் சூரியன்
காரிருள் கலைந்த
கல்விச் சூரியன்!
தென்னாட்டு காந்தி
தெற்கில் உதித்த
தென்றல் காற்று!
வயிற்று இருளுக்கு
விளக்கேற்றி கல்விக்கு
வாய்க்கால்
வெட்டியவன்!
கருமமே கண்ணானவர்
கஜானாவில்
கை வைக்காதவர்!
நில வளம் பெருக்க
அணைகள் கட்டியவர்
நீண்ட பார்வையால்
ஆலைகள் கொண்டுவந்தவர்!
அதிகம் படிக்காதவர்
அதிக பள்ளிகளை
திறந்தவர்!
வடக்கு
தெற்குகிற்கு கால்பிடித்து
தீர்மானம்
கேட்கவைத்தவர்!!
பட்டங்கள்
இவரை சூடி
தன்மதிப்பை
உயர்த்திக் கொண்டன!!
பாடசாலைகள்
இவரையே
முன்மாதிரியாக
முடி சூட்டிக் கொண்டது!!
இவர் விரலசைவில்
இந்திய பிரதமர்கள்
பிறந்தார்கள்!
இந்திய தேசிய
காங்கிரஸில் இணையற்ற
தலைவராக இவரையே
வரலாறு கோடிட்டுக்காட்டியது!!