நிறைந்த மூச்சைப்பேணி, நிறைய பேச்சை புறக்கணி

தினம் இருபத்திநாலு மணி நேரம் தொடர்வது மூச்சு
சில நொடிகள் மூச்சு இல்லையெனில் உயிர் போச்சு

ஒரு நாளில் அதிக நேரம் நாம் செலிவிடுவது பேச்சு
இதனால் சிந்தனைக்கு கிடைப்பதில்லை முழு வீச்சு

ஆத்மாவுடன் ஒன்றி இயங்குவது நாம் விடும் மூச்சு
இதை கவனமுடன் உணர்ந்து, உகந்த நீரை பாய்ச்சு

சூரியன் உதிக்கும் முன்னமே உதித்திடும் நம் பேச்சு
பேச்சினை குறைப்பின் இல்லையே ஒரு ஏச்சு பேச்சு

மூச்சினை ஆழ்ந்து கவனி நிச்சயம் குறையும் பேச்சு
பேச்சு மீது அதிக நாட்டம் இருப்பின் அமைதி போச்சு

நன்கு சிந்தனை செய்யணுமா, குறை அதிக பேச்சு
சுறுசுறுப்பா இயங்கணுமா, மெதுவாக விடு மூச்சு

அன்றாடம் பேச்சை குறைத்து, செய் மூச்சு பயிற்சி
தானாகவே நல்லபடியாக நடக்கும் சனிப்பெயர்ச்சி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jul-21, 11:28 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 94

மேலே