இன்று அமாவாசையோ
இன்று அமாவாசையோ ?
ஆகாயம் இருட்டி விட
வானத்தில் எட்டி
பார்த்த நிலா
திகைத்து நின்றது
பூமியெங்கும் நிலாக்கள் !
சிறியதும் பெரியதுமாய்,
பாதை ஓரங்களிலும்
காணும் இடங்களிலெல்லாம்
மினுக் மினுக்கென
மின்னலிட்டு கொண்டிருக்கின்றன
கோபத்தில் மேகங்களுக்குள்
மறைந்து போய்விட்டது
நிலா..!
மின் விளக்குகளாய்
இத்தனை நிலவுகள்
வைத்திருந்தும்
வானம் பார்த்து
இன்று அமாவாசையோ ?
சந்தேகம் கேட்கிறான்.