மறைந்த மகிழ்ச்சிகள்

தொலைக்காட்சி முன் அமர்ந்து நாடகங்களை கண்டுகளிக்கும் மக்களே
உன் குழந்தையின் மழலை குரலை கேட்க மறந்து விட்டாயோ
இன்பம் பெருக்கெடுத்து வரும் உன் குழந்தையின் மழலை பேச்சை கேட்கும் பொழுது அதில் பெருகி வரும் ஆனந்தத்தை நீ கண்டதுண்டோ
அதை மறந்து நாடகத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறாயே


உன் பணி மட்டுமே பெரிதென கொண்டிருக்கும் மானிடனே
இயற்கையின் அழகை கண்டு களிக்க மன அழுத்தம் குறைவதை மறந்து விட்டாயோ நீ
உன் வீட்டு மொட்டை மாடியில் நின்று சூரியன் உதிக்கும் அழகை
பார்த்ததுஉண்டோ நீ
உன் வீட்டுத் தோட்டத்தில் இசை பாடுவது போலவே இருக்கும் குருவிகளின் குரலை கேட்டதுண்டோ நீ
காற்றில் நடனம் ஆடுவது போலவே மரங்கள் அசைவதைக் கண்டு இருக்கிறாயா நீ
வண்ணத்துப் பூச்சி பறக்கும் அழகினை ரசித்ததுஉண்டோ நீ
மாலையில் மடந்தைகள் கூட்டம் கூட்டமாக செல்லும் அழகை ரசித்து இருக்கிறாயா நீ
இரவில் வானத்தில் நிலவையும் நட்சத்திரத்தையும் கண்டு உன் குடும்பத்துடன் உணவு உண்டு இருக்கிறாயா நீ
எத்தனை இயற்கை அழகு இவ்வுலகில்
மானிடனே பாவம் நீ
இத்தகைய இயற்கை அழகு உன் கண் முன்னால் இருந்தும்
கண்ணை மூடிக்கொண்டு
பணி மட்டுமே உன் வாழ்க்கை என சுருக்கி கொண்டாயே
மன அழுத்தத்தால் துயரப் படுகிறாயே
இனியேனும் உனக்காகவும் சிறிதுநேரம் செலவு செய்து இயற்கையின் அழகை கண்டு ரசித்து மன அழுத்தம் நீங்கி வாழ்வாயாக.
மறைந்து கிடக்கும் மகிழ்ச்சிகளை மீண்டும் மீட்டு எடுக்க வாருங்கள் மக்களே.

எழுதியவர் : மகிகுனா (16-Jul-21, 5:23 am)
பார்வை : 1117

மேலே