துள்ளும் இளமையில் - ஆசிரியத்துறை பா

புகழுக்காக இறைவன் எவரையும் காப்பதில்லை
புகழாத எவரையும் இறைவன் தண்டிப்பதும் இல்லை
உழைக்காத எவரையும் அவனே விருப்புவது இல்லை
உழைப்பிற்கான கூலியை கொடுக்கா எவரையும் விடுவதில்லை

உள்ளம் கள்ளமாய் உள்ளவரோடு விளையாடுவான்
துள்ளும் இளமையில் மதிக்காதோர் கண்டு மகிழ்வான்
வெள்ளமென பலவகை சோதனைகளைச் செய்வான்
பள்ளம் மேடென செயல்களில் இறக்கியேற்றி விடுவான்

இல்லாதது போலவே எந்நேரமும் இருப்பான்
பொல்லாதவனாய் பாராமலும் பதுங்கியே இருப்பான்
நல்லவனாய் உன்னை மாற்றுவதே அவன் எண்ணம்
எல்லா நிலையும் சரியானதும் அவனை உணரலாமே

முயலுவோருக்கு பாதமாய் இருந்து பாதுகாப்பான்
உயர நினைப்போரை தோளில் தூக்கியே ஏற்றுவான்
அயராதவருக்கு அனைத்து திறனையும் அளிப்பான்
பயமின்றி அவனை நம்பினால் அவனியில் செழிக்கலாம்

படையல் உடையுடன் பணமென்று எதனையும்
உடையவரின் உடைமையாய் இருப்பதில்லை அவனும்
தடையை உடைக்கும் வல்லமை பெற்றவரின் அருகில்
கடைநிலை ஊழியனாய் காத்தே பார்ப்பவன் இறைவனே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Jul-21, 10:30 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 46

மேலே