முட்டையில் அடைத்தே மண்ணிலே
நிலைமண்டில ஆசிரியப்பா
கனன்று கொண்டதாய் இருக்கிற கதிரவன்
எதனையும் எரிப்பது இல்லையே எளிதிலே
சுழன்று கொண்டே இருக்கிற புவியுமே
எதையுமே சாய்ப்பது இல்லையே விரைவிலே
தண்ணீர் உண்ட மேகக் கூட்டமும்
வானிலே உரசும் போதினில் நெருப்பின்
வீரியம் நிலத்தின் உயிர்களை இறந்திட
நொடியிலே வழிவகை செய்வது ஆபத்தே
முட்களால் நிறைந்த தாவரம் அனைத்துமே
எதாவது மருந்தென இருக்குமே இருப்பினும்
சீமையில் இருந்து வந்த முள்மரம்
முள்ளால் சூழ்ந்துமே மருந்திலை வியப்பே
சூலினால் உயிர்களும் குழவியை ஈனும்
முட்டையில் அடைத்தே மண்ணிலே புதைக்கும்
ஊர்வன பறப்பன நீரினம் என்பவை
எதற்கும் இம்முறை பொதுவென உணர்வாய்
பேச்சினால் பலவகை பகைகள் மூளும்
ஆயினும் அதனில் நாட்டம் கொண்டோர்
நீங்கார் எப்பவும் அதனால் பூசலும்
தழுவிடும் தலைமுறை முழுதும் என்றுமே
------ நன்னாடன்.