கோரைப்பாய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கோரையின்பாய் நற்குணமாங் கூறரிய மந்தமறும்
கூரிய தேகங் குளிர்ச்சியுறும் - வாருலகில்
நன்னித் திரைகூடு நாடாது ரூட்சையிதை
உன்னிப் புவியில் உரை
- பதார்த்த குண சிந்தாமணி
இப்பாயில் படுத்தால் அக்கினி மந்தமும் சுரவேகமும் நீங்கும்; தேகக் குளிர்ச்சியும், நல்ல நித்திரையும் உண்டாகும்