நன்னாரி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நன்னாரி வேரை நறுக்கி யரைத்துமதன்
வின்னாரி யூணால் வெதுப்பியே - தின்னவெறி
தோணாது கற்றாழைச் சோற்றிற் கலந்துண்ணக்
காணாது வண்டு கடி 1
- பதார்த்த குண சிந்தாமணி
நன்னாரிவேரை அரைத்துத் தேனில் பாகஞ்செய்து உண்டால் அதிக பித்தம் தீரும்;.இதையே கற்றாழை சோற்றோடு உண்டால் வண்டுகடி நீங்கும்;
நேரிசை வெண்பா
சலதோஷம் பித்தமதி தாகம் உழலை
சலமேறு சீதமின்னார் தஞ்சூ(டு) - உலகமதிற்
சொன்மதுமே கம்புண் சுரம்இவையெ லாம்ஒழிக்கும்
மென்மதுர நன்னாரி வேர் 2
- பதார்த்த குண சிந்தாமணி
முறைப்படி இன்னும் உண்போமானால் நீரேற்றம் பித்த நோய், அதிக தாகம், வாய்நீர் சுரத்தல் புணர்ச்சியின் சூடு, மதுநீர்க் கிரந்தி, சுரவேகம் ஆகியவை நீங்கும்