சங்க குறுகல்

சங்கங்களின் குறுகல்

ஆதி தமிழன்
சங்கம் வைத்து
தமிழ் வளர்த்தான்

அறநெறி வளர்த்தான்
ஆன்மீகம் வளர்த்தான்

இயலிசை நாடகம்
வளர்த்தான்

இலக்கிய
சோலை வளர்த்தான்

மொழி வளர்த்தான்
உலகம் தவிர்த்து
மெய்ஞானம் வளர்ந்தான்

மரமும் வளர்த்தான்
மறமும் வளர்த்தான்

குணம் வளர்த்தான்
தனம் வளர்த்தான்

கல்வி வளர்த்தான்
கலைகள் வளர்த்தான்

கற்பு வளர்த்தான்
வெற்பு தோல் வளர்த்தான்

தொழில் வளர்த்தான்
திரைகடலோடி
திரவியம் வளர்த்தான்!

இக்கால தமிழன்
சங்கம் வளர்த்தான்
சாதிக்கொரு சங்கம் வளர்த்தான்!

மொழி வளர்த்தான் இல்லை
பிறமொழி மோகத்தில்
தாய்மொழி வெறுத்தான்!

சங்கம் வைத்து
இனவெறி வளர்த்தான்!
மதவெறி வளர்த்தான்!

நம் நாட்டுக் கலை தவிர்த்து
மேல்நாட்டு கலை
பயிற்றுவித்தான்!

தாழ்த்தப்பட்டான்
தனியே அதற்கு ஒரு சங்கம்
வளர்த்தான்!

பிற்பட்டான்
பிறகு ஒரு சங்கம் நிறுவி
அதன் பின்னே ஓடலானன்!

மிகவும் பிற்பட்டான்
பெருமை பல பேசி
போதாது இட ஒதுக்கீடு
எனக் கேட்டான்!

சங்கங்கள் எல்லாம்
சாதி சந்துகளாக
குறுகி விட்டனவே????

#கவிஞர் புஷ்பா குமார்

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (18-Jul-21, 11:34 am)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 564

மேலே