முதல் புத்தகம்
அன்பாய் அழைத்து வந்த அம்மா
அனாதயாய் விட்டுச்சென்றார்.
ஆதங்கப்பட்ட என்னை,
அணைத்துக்கொண்டார், ஆசிரியை.
அச்சத்துடன் பார்த்தேன்,
அந்த புது அரவணைப்பை,
அது ஒரு புத்தகம் ஈந்தது.
ஆச்சரியத்துடன் திறந்தேன் தலைகீழாய்
அனைத்தும் விளையாட்டாய் தெரிந்தது.
அண்ணார்ந்து பார்த்தேன்,
'அ' என்றார் ஆசிரியை.
ஆகா! கற்றுக்கொண்டேன்
முதல் புத்தகத்தின் முதல் எழுத்தை!