பொன் எழுத்துக்களால்
நீதி மன்றங்களும் காவல் துறைகளும்
சால பெருகுவது நாட்டில் கேடு விளைந்ததை
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது போலும்
விலை ஏற்றங்களும் இயந்திர உற்பத்தியும்
உறு செழிப்பது நாட்டில் உழைப்பு குறைந்ததை
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது போலும்
கல்விக்கு கட்டணமும் கடமை செய்ய கையூட்டும்
வெகுவாய் இருப்பதெனில் அங்கு தரம் குறைவதை
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது போலும்
அதிகரிக்கும் புலால் உணவும் ஆண்பெண் தவறுகளும்
மிகுதியாய் உயர்தலே உணர்ச்சி அடிமையென்று
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது போலும்
ஆண் பெண் சமமெனும் நிலை அதிகம் ஞாலத்தில்
அதிகரிக்கும் போது குடும்பம் குலையும் என்பதையே
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது போலும்
இலவசமாய் எதையுமே அரசுகள் கொடுக்குமாயின்
எத்தொழிலும் நனி நொடிவடையும் என்பதையே
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது போலும்
உற்பத்தி செய்வோருக்கு உரிய விலை இல்லையெனில்
கள்ளச் சந்தை வியாபாரம் மிக உயர்ந்தது என்பதை
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது போலும்
----- நன்னாடன்.