வண்ணமாய் உயிரின உடல்கள்

இணைக்குறள் ஆசிரியப்பா

ஆவினமும் ஆடினம் அழகு பூனையினம்
அனைத்தின் உடலிலும் நிறத்திலே முடிகளும்
கரடிகள் குதிரைகள் ஒட்டகச்சிவிங்கள்
சிறுத்தைகள் வரிப்புலி எனவும் பலவகை
யாவின் உடலிலும் நிறமிகு வரைவுகள்
கோழியினம் மயிலினம் மீன்கொத்தி மைனா
தேன்சிட்டு மணிப்புறா கிளியினம் என்றும்
பலவகை பறவைகளின் இறகுகள் நிறத்திலே
மீனினம் நிலமுடன் மகத்தான பாறைகள்
எதிலும் வண்ணங்களின் செறிவென இருந்திட
சில வகை மரங்களும் செடிகள்
எல்லாமும் பலவகை கலவையின் நிறத்திலே
மனிதர்கள் மந்திகள் மதமிகு யானைகள்
கரடி காக்கை சிங்கமும் குயிலினம்
என சிலயினங்கள் ஒரேயொரு நிறத்திலே
மகிழ்விலே இருப்பவைக்கு மனம்போல் நிறமும்
மாசு மனத்தினருக்கு ஒருநிற
தோற்றந்தந்த இயற்கையை வியந்து போற்றுவோமே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Jul-21, 10:14 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 46

மேலே