சிவாஜி எனும் சகாப்தம்

கலைத்தாயின் மூத்தோனே!..

செவாலியே சிவாஜியே!..

சரஸ்வதியின் வாழ்த்து பெற்றவனே!.
நவரச நடிப்பின் பாரி வேந்தனே!..

கலையின் உச்சம் பார்த்த முதல்வனே!..

கைவிரல் பத்தும் பேச..

கால்களும் கதை சொல்லும் வித்தகனே!..

கண்களில் கோபத்துடன் காதல்

வார்த்தைகளுக்கு உயிர் ஊட்டியவனே!..

இமைகளும், இமை முடிகளும்

உன் குரலுக்கு தானாகவே தலை சாய்க்கும்!..

கன்னத்தின் துடிப்பு.. கம்பீர நடை..

அடித்தும் வராத அழுகை..

என நடிக்கும் திறன் உடையவனே!

எம்மொழி தமிழை..

அடுக்கு மொழி வசனமாக..

பேசி கிரங்கடித்தவனே!..

உணர்ச்சி மிகு நடிப்பால்

ரசிகர்களை தேம்பி அழ வைத்தவனே!..

நடிப்பு எனும் பல்கலைக்கழகம் நீ !..

அங்கு படிக்கும் நடிகர்களின் கடவுள் நீ!-

வாழ்க சிவாஜி… வளர்க சிவாஜி புகழ்..

-தமிழன் சாரதி, திருவண்ணாமலை.

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (21-Jul-21, 3:16 pm)
சேர்த்தது : தமிழன் சாரதி
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே