போக்கு
தகுதி ஒன்றே சமத்துவம்,
இன்று தள்ளாடியபடி...,
தூபம் பண்பாக நிற்க,
நேர் பார்வை கொஞ்சம்
கோணலாகிப்போனது..,
வினாக்கள் தேடியபடி
இளைஞர்கள் தெருக்களில்,
திராவிட ஆன்ம கூட்டுக்குள்
மேற்கத்திய மோகம்,
படர்ந்த மனங்களாக...,
மனமும் உடலும் சிக்கலில்..
நவீன ஆளுமைகள்
ஆழைகழித்தபடி...,
போன போக்கும்
நவீன போக்கும்
நடுத்தெருவில்,
உறவைத் தேடி!!!

