நமது மூச்சு மண்டலத்திற்குக் கவசம்-இமகொமிச கஷாயம்
நமது மூச்சு மண்டலத்திற்குக் கவசம்-இமகொமிச கஷாயம்!
பகுதி 01 . அறிமுகம்.
பெரும்பாலான நோய்த் தொற்றுக்கள், நமது மூச்சு மண்டலத்தின் வழியே நுழையும் வைரஸ்களாலும் பாக்டீரியாக்களாலும்த்தான் ஏற்படுகிறது. தற்போது உலகம் எங்கும் சர்வ லோக் சஞ்சாரியாகத் தலைவிரித்தாடும் கொரோனா இந்த வகையில் தொற்றுவதில் மகா கில்லாடி என்பதை நாம் நன்றாக அறிவோம் இல்லையா?
அதனால், நமது மூச்சு மண்டலம், தொற்று நோய்களுக்கு எதிரான தனது இயற்கையான எதிர்ப்பாற்றலை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேணிட்யது இன்றியமையாததாகிறது. இதற்காக நாம் தான் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். இந்த மாதிரி உடலின் தொற்று நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்ள அப்படி ஒன்றும் பிரமாதமான ஆங்கிலேய மருந்துகள் இல்லை! இப்போதெல்லாம் இந்த வேலைக்கு, நாம் பலரும் நாடுவது நம்ம் பாரம்பரிய இயற்கை மூலிகிய மருந்துகளைத்தான். அவற்றைக் கூடக் கடைகளில் வாங்காமல், நாம் எல்லாரும் நமது வீடுகளிலேயே புதிதாகத் தயாரித்துக் கொள்கிறோம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையிலேயே "சுடச் சுட" அவ்வப் போது தயாரித்துக் கொள்கிறோம். அதைச் செய்வதும் ஒரு இயற்கை மூலிகை மருத்துவரோ ஆயுர் வேத் மருத்துவரோ அல்ல! நம்வீட்டிலேயே இருந்து நம்மைக் கவனித்துக் "கொள்ளும் குடும்ப மருத்துவர்" ஆன நம் தாயும் மனைவியும் தமக்கையும் தங்கையும் தான்!
மிக எளிய மருத்துவம்.
இக் கட்டுரையில் நமது உடலின் மூச்சு மண்டலத்தின் "நோய் எதிர்ப்புத் திறனை" எப்படி நல்ல ஆரோக்கியமான நிலையில் வைத்துக் கொள்வது என்றும் அதற்கான இயற்கை மூலிகை மருந்துகளை எப்படித் தயாரிப்பது என்றும் பார்க்கலாம்.