கடவுளைக் காட்டு

கடவுளைக் காட்டு

( வெண்டளை) வெண்டாழிசை
(1)

வானின் அனாதைகள் அண்டங் களென்றார்
வானின் சூரிய சந்திரன் மீனென
வானினை மதங்குறிக் கவும்
(2)
இந்து மதமே எங்கும் மூத்தது
இந்து சூரியன் நவகோள் பரணியாம்
இந்து வேதமதில் தேடு

(3)
மத்த வேதத் திலார் சொன்னார்
ஒத்தனும் இல்லை புரட்டிப் பாரும்
எத்தனை சொன்னது இந்து
(4)
இந்து வேதம் விஞ்சா னமது
தந்தார் பிறரும் சரித்திர வேதம்
இந்து வேதம றிவு
(5)

வேதம் சொன்னது எல்லா பாழையும்
வேதம் முப்பாழ் என்றது பிரிவாம்
வேதம் சொன்னவா னிது
(6)
ஒளிப்பாழ் தரைமே லதுவே ஒளியது
வெளியொளி பாழாம் பின்னே சொன்னார்
வெளிப்பாழ் முப்பா ழிது
(7)
முப்பா ழதையும் ஊன்றித் தாண்ட
எப்பக் கலிலும் இருட்டு இருட்டே
அப்பா லுமிருளே பாரு
(8)
ஏக இருளில் ஏகி யுகங்கள்
போக கோடி கோடி சூரியர்
ஏகதெய் வவொளியாம் நின்று

(9)
இத்தனை கண்டார் இகத்தில் யாராம்
முத்தன் சித்தன் மூலன் ஒத்தன்
மொத்த் சித்த்ரில் சொல்
(10)
எத்தனை கடினம் யேட்டில் கொள்ளா
சித்தன் குளிகை வயிர்வாய் பூட்டி
பத்தன் பறந்துகண் டது

(11)

எத்தனை முயன்று சென்று கண்டது
முத்தன் ஒத்தன் மூலன் சொன்னது
மொத்தசித் தினுண்மை கூறு

(12)

தெய்வம் நிகர்மனி தரென ஆவரோ
தெய்வம் யேசுவை இசுலாம் ஏற்கார்
தெய்வமி ல்லையாம் யேசு
(13)
அல்லா. உருவம் அற்றவர். ஆக
அல்லா வையவர் பார்க்க விழைந்தார்
இல்லை அறிந்திடு நீயும்

(14)
முருகை தெய்வமாய் நிறுத்தும் தமிழரே
முருகன் ஞானம் பாரும் பரமே
பெரும்தெய் வமென்றார் தேடு

(15)
தேவா ரத்துடன் திருவா சகமும்
நாவால் பாடிச் செய்ததை அறியான்
பாவாம் தெய்வப் பாட்டு

(16)
இங்கு முனியுடன் ரிஷிசித் தெனவும்
தங்கி யாசிர மசீடர் கவர்வ
ழங்கினர் கடவுளின் அறிவு


(17)
திருப்பா வையுடன் திருவெம். பாவை
அருட்பா இன்னும் பலதை செய்தார்
மருட்பா யறியா னவன்.
(18)
சித்தராம் குறுமு னியென்ன சித்துப்
பத்தெட் டும்பல் பாயிரம் வாக
டத்தில் சொன்னதெ வர்க்கு ? ( உனக்கு)

(19)
பத்திரண் டைந்தும். அறிவுக் கல்வி
சத்தியம் பலலாண் டாய்ந்த சித்து
மொத்தம் சொன்னார் உண்மை

(மொத்த அறிவும் 25 துறையில் அடக்கம்)

(20)
கற்பம் முழுசாய் தேடி வெற்றி
பற்பல துறையில் கண்ட சித்தர்
நற்தெய் வச்சமம் பாரு

(21)
வெள்ளையர் புத்தகம் சிறந்த தென்று
பள்ளிப் பிள்ளை யாகவே படிக்க
கிள்ளை யானா ரிந்து
(22)
அத்தனை தெய்வநூல் தமிழில் இங்கே
ஒத்தை நூலும் உண்மையில் படிக்கா
எததன் உளருவன் வீண்

(23)
தமிழனா இவனும் ஆவாய் நுனிப்புல்
அமிழ்தாம் தெய்வப் பாவலர் அருள்நூல்
தமிழன் செவியறி யாது

(24)
கடவுளர் தெய்வம் ஆண்டவன் என்கிலர்
மடமாந் தரவர் மடையர் சொல்வர் திடமாய் இயற்கையா மிது

(25)

சித்தர் கண்டார் சிறந்த கடவுளை
ஒத்தரில் லையாண் ஒத்த பெண்ணும்
சுத்தசன் மார்க மிது

(26)
சிவமுடன் சக்தி தீட்சை தாண்டி
சிவத்தின் தத்துவம் இறையின் தத்துவம்
தவறா முப்பத் தாறு. ( 1.சிவதீட்சை)

சக்தி தத்துவம் மாயை தத்துவம்
தக்கவா மறுபது அறிவீர் மக்காள்
தக்கதாய் மொத்தம் நீக்கு. (2.சக்தி தீட்சை).

(27)
சித்தாந் தம்யா தெனின்கோட்ப் பாடு
சித்தர் கோட்பா டெல்லாம் முதலாம்
மொத்தம் தெற்கின் சொத்து ( 3.சித்தாந்த சித்தி)

(28)
கடந்தது மெல்ல கடந்து சேர்ந்து
வடக்கில் கொஞ்சம் மாற்றிவே தாந்தம்
திடமென் றாரதை கேள். ( 4.வேதாந்த சித்தி)

(29)

மந்திர மாவது மந்திர நீறு
மந்திர அட்சரம் பலிக்கும் சடுதி
மந்திரம் ஓதும் கற்று ( 5. மந்திர சித்தி))

(30)
மொத்த மந்திர மும்நீ உருசெய்
தத்தனை யும்செயம் பண்ணு மகனே
சத்தமௌ னததைப் பாரு

(31)
அம்உம் சேர மௌனம் ஓமடா
அம்உம் என்றே காலைக் கும்பி. ( காற்றை)
அம்உம் யகரம் பூட்டு. ( 6.மௌனசித்தி)

(32)
இடியுப் பாமுடி யென்பர் பின்னே
இடிநடு கடல தின்கல் லுப்புடன்
இடிமண் ணுப்பைத் தேடு

(33)
அடியைத் தேடி மாலும் கூர்மனாய்
முடியை தேடயன் முயலன் னமாகி
பிடிக்கார் தேடி யெங்கும்

(34)
காயவுப் பிதுமூன் றைப்பிடித் துண்டு
காயம் சாயா காக்க சித்தியு
பாயமக் கடவுள் காணு. (7. காய சித்தி))
(35)

அகர மென்றார் அதுயெட் டென்றார்
அகரம் விந்து வாமென் றாரு
உகர நாதமற் றொன்று

(36)
எட்டும் ரெண்டும் சேர்க்க பத்தாம்
பட்டென உடைக்கு மந்தப் பூட்டை
சட்டடெ னக்கால் பிடி. ( 8. அகர மெட்டு சித்தி)

கால் = காற்று
(37)
எட்டும் ரெண்டும் பத்தாக் கியுண்ணு
எட்டும் நமசி வயயெனும் மந்திரம்
விட்டால் கிட்டா திது

(38)

மூலா தாரம் நுழைகால் வாசல்
நூலாய் விந்து நுண்துளை வழியே
காலா லடுத்த தளை. (காற்றினை மாற்றி )

(கட்டிய விந்து மூலாதாரத்தில் உருக சுழு முனை காற்றைஅங்கே குவித்து கும்பிக்கவும்)

(39)
வாச லூடே நமசிவ யமைந்து
வாசல் சொல்வர் ஆறென தளமாம்
மோச மடைப்பை நீக்கு. (9. ஐந்தெழுத்து சித்தி)

( உஷ்ண மான உருகிய விந்து தளைகளின் அடைபபை நீக்கிடும். அத்துளை
வழியே படிப்படியாய் யேரலாம். உச்சி சகஸ் திரத்திற்கு ஏற்று. )

(40)
விந்தும் உடலுயி ரதைமே லேற்றி
அந்த நெருப்பின் ஆற்றை மயிராம்
விந்தை பாலமிட் டேகு.

யேகு =. முன்னேறு

(41)
விந்தைப் பாலத் தில்விந் துதாண்ட
அந்தத் தாயாம் வாலை யுண்ணு
விந்தை பரத்தில் சேரு

(அன்னாக்கு மேலே ஆலவிழுதாய் உண்டு அங்கு பரத்தின்
துளி உயிராய் தங்கும் அதனுடன் உனது விந்தினை செரு )

(42)
விந்ததில் மனிதனு யிருள்நாக் குமேலே
விந்தை யாலம் விழுதில் உயிராம்
முந்தை பரமன் துளி

(43)
சேர்க்க சீவக்க ளைபரத் துடனே
பார்க்க மிர்த மங்கு சொட்டும்
சொட்டை யுண்டு சொக்கு. . ( 10 ஆறாதார சித்தி)

(44)
சொக்கு சொக்கு சோஹம் என்றே
சொக்கி மூச்சை ஹம்மென வாங்கி
அக்காற் றைநிறுத் திடு

(45)
உள்ளே நிறுத்தி யோட வெளியேத்
தள்ளு சோவென வதையும் செல்ல
கள்ளமாம் யோகமா மது

(46)
சிவத்தில் கலக்க சீவன் புனிதம்
அவத்தை நீங்கி அனைத்து முன்னுடை
தவத்தால் பிரசா தமது ( 11. பிரசாத சித்தி)

(47)
தவதால் மற்ற ஆன்மா காண ,
அவரைக் காண்பர் அடையா . ளத்தடன்
தவமாம் ஆன்மசித் தது. (12 .ஆன்ம சித்து)

(48)
,அதுவு மன்றி அறிவர் எப்பொருள்
எதுவும் தத்வம் விளங்கும் மனதில்
அதுவே தத்துவம் பாரு. ( 13.தத்துவ சித்தி )

(49)
நோயால் மனிதர் தோய்ந்து சாவர்
காயம் பலமாய் சாயா மருந்தாய்
நேயமாய் அளித்தார் சித்து. (14 தேக சித்தி. )

(50)

கண்டமென் அண்டம் பாயக் குளிகை
கண்டார் மறைய அருவ சொரூப
பன்னி ரண்டைப் பாரு

(51)
போகன் காலை பொதிகை சேர்வன்
போகன் மாலை போவன் சீனம்
போகன் தொழுதான் முருகு. ( 15. குளைக சித்தி)

(52)
மனக்கண் ணனைத் துருவை
உணரல் அற்புத சொரூப சித்தி
ஞான திருட்டியென் பர் ( 16. சொரூப சித்தி)



(53)
ரெத்தின உலோக மெல்லா பாஷா
னத்தின் கலப்புங் காரசா ரவுபர
சத்தின் வைப்பறிந் தாரு

(54)
ஆண்டவன் படைப்பின் மொத்த குணமும்
காண்டல் விளங்க பகரல் தத்துவம்
காண்பிர சாதமென் பதும்.
55)
இவ்வினை இஃதை விளைக்கு மென்றதை
அவ்வண் உரைத்தல் ஞான தத்வமாம்
சிவப்பிர சாதமென் றது. ( 17. தத்துவப் பிரசாத சித்தி)

56)
வாதமென் றால்ரச வாத மப்பா
பாத்திட செம்பு வங்கம் பத்தரை
மாத்துத் தங்க மாகும்.

(57)
தரந்தாழ் செம்பை தங்கம் செய்தல்
வரமாம் சித்தி வங்க யிரும்பு
தரம்பத் தரையாம் பார் ( 18 .வாத சித்தி. )
(58)
விண்ணில் சொர்க்கம் விசுவா மித்திரன்
விண்ணிழி வீழ்ந்த திரிசங் குக்கென
கண்டீந் தயீகை வரம் ( 19. வரப் பிரசாத சித்தி. )

(59)
சாம்பவம் பரமாம் சதா சிவமாம்
சாம்பவ அசரிறீ காதில் உறையும்
சாம்பவத் தொடர்பு தரும். ( 20 சாம்பவ சித்தி)

(60)
போத மென்றால் உயர்ஞா னமப்பா
வேத ரிஷிமுனி சித்து ஞானி
வேதரி ஷிபுத்தன் பேர். ( 21 போதசித்தி)

(61)
காலசித் தியிறந்த காலம் எதிர்நிகழ்
காலம் விடய ஞானம் கொண்டார்
காலம் வென்றவச் சித்து. (22 கால சித்தி. )

(62)
சமாதி ரிஷியாம் குளிகை சித்தன்
சமாதி வாசியோ கம்செய் முனிமூன்
றுமாய்முடி ஞானியென் றும் ! 23 ஞான சித்தி )

(63)
ஏற்றி கும்பித். திருகால் ரேசித்து
மாற்ற மும்மண் டலமனே கஞ்செயம்
சாற்று வமிர்தம் சொட்டும். ( 24. யோக சித்தி. )

(64)
ஆதார சித்தி கடைசி ஞானம்
ஆதா ரமில்லா அணடங்கள் யாங்கனம்
மோதா மிதந்தோ டும். ( 25. ஆதார சித்தி )

(65)
காரணம் கண்டார் யாராம் உலகில்
காரண மிதப்பும் அடர்வும் ஈர்ப்புடன்
பாரதன் தொலைவ ளந்து

(66)
முன்நல் பத்து நூறாண் டல்ல
முன்னா யிரமாண் டுமுன்னே சாத்திரம்
சொன்னார் கோள்குறிப் பும்

(67)
கணித்தார் சரித்திரம் கணக்காய் யெவர்க்கும்
கணித்தார் ஜோதிடம் வைத்தீஸ் வரத்தில்
கணித்தார் ரேகைவி விரல்

(68)
அனைத்தையுங் கற்று பரமனை கண்டார்
அனைவரில் மூலனாம் பாரு --- தினையும்
வினைபய மில்லான் இறையாம் பரத்தில்
நனையமீளார் மற்றோர் பயம்



சிற்றின்ப மயக்கமே பலரையும் மீளாச்செய்யும் . பல்லாயிர சிற்றின்பம்
ஒன்றிசேர இருக்கும் பேரின்பம் அதில் ஐக்கியமானால் மீண்டு வெளி வருதல்
கடின மென்ற தயக்கத்தில் மற்ற சித்தர் நுழையா நிற்கின்றனரோ. என்னவோ
புரியவில்லை. அல்லது அதுவும் பரமனின் கட்டளையோ தெரிய வில்லை..
காரணம் தவசித்தர்களின் அகத்தில் புகுந்து தகுதி சொல்பவன் அகத்தீசன்
அவனே பரம்பொருளில் இன்னும் ஐக்கிய மாகவுமில்லை வெளிவரவுமில்லை.
இதை போகனின் 7000 நூலில் சொல்லியிருக்கிறான். ஏன் மும்மூர்த்திகளுக்கும்
இதேகதி என்றான் போகரிஷி.


..........

எழுதியவர் : பழனி ராஜன் (22-Jul-21, 8:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 124

சிறந்த கட்டுரைகள்

மேலே