சுதந்திரம்

வளமுள்ள நாடுகளும் பொட்டல்காடாய் புதைய,,,
மலர்கள் இல்லாமல் வண்டுகளும் மடிந்தனவே,,,
நச்சு குண்டுகளின் வாசம் பழகியதே,,,
ஆங்கிலேயனின் துப்பாக்கித் துளையிலும்,,,
ஈரத்துடன் முளைத்தது விடுதலை வேர்,,,
எத்தனை போராட்டங்கள் எத்தனை சிறைவாசங்கள்,,,
சொல்லி மாளாது எண்ணி அகலாது,,,
என் மனிதர்களின்
நரபலியில்
மலர்ந்த சுதந்திரப் பூ,,,

சுவாசிக்கும் சுதந்திர காற்றை தந்து,,,
உரிமை சுவாசம் தேடிக் கொடுத்து,,,
வீரத்தை பேனாவில் கொண்டு,,,
ஞானபானு எனும் வாளில்,,,
சூழலையும் சூழ்ச்சிகளையும் விரட்டியடித்து,,,
சுதந்திர தாகத்தை நம் மேல் மூவர்ணத்தால் பூசியவன்,,,
-பத்திரிக்கை ஆசான் சரித்திர நாயகன் சுப்ரமணிய சிவா நினைவு தினம் இன்று

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (23-Jul-21, 2:05 pm)
சேர்த்தது : தமிழன் சாரதி
Tanglish : suthanthiram
பார்வை : 3860

மேலே