செவிலியர்கள்

செவிலியர்கள்


நோய்களைப் பறிக்கவந்த
வெள்ளைப்பூக்கள்!

பொழுது பிரித்தறியாது
ஓடும் கடிகாரங்கள் !

அன்புக்கு பாத்திரம்
ஈயும் ஆதிரைகள்!

மரணத்திற்கு மறுதேதி குறிக்கும்
காலபைரவிகள் !

நித்திரையிலும் புனிதயாத்திரை செல்லும்
கரசேவகிகள் !

தூயவெண் ஆடை தரித்து
உலவும் புன்னகைகள்!

கருணை பிரசவித்த
அன்னைகள்"!

S.UMADEVI

எழுதியவர் : S.UMADEVI (23-Jul-21, 1:55 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 28

மேலே