மனிதம் பேசுகிறது

மனிதம் பேசுகிறது..
அதன் பாஷைகள் சில நேரங்களில்
செவிப்பறை முட்டா மீயொலியாய்!

மனிதம் இருக்கிறது
கடந்து போகும் கடினங்களில்
கடவுளின்
கடைவிரலாய் !

மனிதம் ஒலிக்கிறது
தெளிவுறாக் குழப்பத்தில்
தெளிந்து மீள ஓர் அசரீரியாய் !
.
மனிதம் கிடக்கிறது
தரம் உரசிக் கூற
தரணியில் உரைகல்லாய்!

மனிதம் சிரிக்கிறது
போலி முலாம்களில் உலவும்
உண்மைகளாய்!


மனிதம் உயிர்க்கிறது
நம் இதயத்தை நனைக்கும்
மாற்றான் கண்ணீராய்!

ஸ்.UMADEVI

எழுதியவர் : S.UMADEVI (23-Jul-21, 1:49 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 45

மேலே