ஏழை
ஏழை
அவன் பயணிக்கும் திசைகள்
வறுமையின் திரைச் சீலைகளால்
மறைக்கப்பட்டதாய்!
வறுமையின் கதகதப்பில்
மூட்டம் இடப்பட்ட
அவர்களின் பொழுதுகள்
வெம்பிக் கனிகின்றன பட்டினியால் !
வறுமையின் வேர்கள்
செழித்துக் கொழுத்தததாய்
அவர்கள் சிந்தும் கண்ணீரின் உப்பில்!
அவர்களுக்காய் சமைக்கப்பட்ட பூமிக்கு
வந்து போகும்
மேகமல்ல வறுமை
வானமே அதுவாய்!
வறுமையால் வற்றிப் போன
அவர்கள் எண்ணக்கடலோ
நிராசை அலைகளால் நிரம்பி வழிவதாய்!
வறுமையின் கோடுகள்
ஊடுகின்றன அவர்கள்
உள்ளங்கையிலும் ரேகைகளாய் !
சு.UMADEVI