அவன் தான் கவிஞன்
அவன் தான் கவிஞன்
அவன் கவிவானத்து வேர்கள்
புவி தாண்டி எங்கோ
படர்வதாய்!
அவன் இரவுகள்
இருள் சுமந்து வருவதில்லை!
மாறாய் பகல்கள்
ஒளி மறந்து வருகின்றன !
தேனடை தொட்டு
வீசும் தென்றலின் தூரிகைகள்
அவன் விழித்திரை
எங்கும் சமைக்கின்றன
பிம்பங்களை !
அவன் பார்வையின்
கோண மாறுதல்கள்
ஊனுகின்றன
கற்பனையின் கருக்களை !
கனவு பருகிய
அவன் பொழுதுகள்
எப்பொழுதும்
மந்தாரமாய்த் தீய்வதாய் !
அவன் எண்ண அலைகள்
மனக்கடலை ஆழமாய்
தோண்டிக் கொண்டே செல்வதாய்