செந்தமிழ் தேன்மொழியாம்

நேரிசை வெண்பா



உலகில் தமிழா ஒரேசெம் மொழிசொல்
பலதாம் கிரீக்குடன் பார்சி -- இலத்தீனும்
கொள்ளத் தமிழர் பொறாமையால் கொள்ளவும்
தள்ளிடப் பெற்றார் பிறர்




உலகில் தமிழா ஒரேசெம் மொழிசொல்
சிலதுண்டு காட்டுவேன் இங்கே -- கலகம்
சமஸ்கிருதம் கன்னடத்தெ லுங்குமலை யாள
சமமா ஒடியனென்றே சொல்.



உலகின் செம்மொழி கிரேக்க மொழி பார்சி இலத்தீன் என அறிவித்தார். .
இங்கேத் தமிழர் கூத்தாட பாரதமே தமிழை செம்மொழி என்றார். 14000 பேரே
பேசிடும் சமஸ்கிருதத்தில் ஏராளமான பழம்பெரும் நூல்கள் உள்ளதால்
அவரும் வாதிட்டு செம்மொழி தகுதி பெற்றார். விடுவாரா மற்றவர். ஒரிசாக்காரன்
தன் கட்டிடக்கலை காட்டியும் கன்னடக்காரர் மலயாளத்தாரும் போராடி செம்மொழி பெற்றார்.
M.G.R. கேட்டவர்க் கெல்லாம் பட்டியலில் இடங்கொடுத்து. 100%. 180% ஆக்கிய
கதையாய் இந்தியாவில் மட்டும் 5 செம்மொழிகளாம். பிசுபிசுத்தது செம்மொழி பட்டம்



கீழ்க்கண்ட வையும் செம்மொழியாம் பாருங்கள்
தமிழ் 2004
சமஸ்கிருதம் 2005
தெலுங்கு. 2008
கன்னடம். 2008
மலையாளம் 2013
ஒடியன். 2014

தமிழ் படைத்த அகத்தியனே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அவர் நூலிலே நம் தமிழை
பைந்தமிழ் செந்தமிழ் தீந்தமிழ் என்று அவர் எழுதிய பரிபாஷை ஐந்நூறு என்ற நூலிலும்இன்னும்
பல நூல்களிலும் சொல்லியிருக்கிறார். தமிழ் ருசியை உணராதவன் எம்மொழி
என்று சொல்லி என்ன வாகப் போகிறது


......

எழுதியவர் : பழனி ராஜன் (24-Jul-21, 9:59 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1721

மேலே