பிறவி இல்லா வாழ்க்கை

பிறவி இல்லா வாழ்க்கை

அலைபாயும் மனதை அடக்க முடியாமல்
ஆரவாரத்துடன் ஆசைகள் பல தோன்றிட
இன்னல்கள் வலிய வந்து தாக்கிய வேளை
ஈடு கொடுக்க முடியாமல் திணறி தவிக்க
உடலை தியாகம் செய்ய எண்ணிய பொழுது
ஊன் உருகி அன்போடு இறைவனை நினைக்க
எங்கும் நிறை அப்பரம்பொருள் ஆசி அளிக்க
ஏக்கம் யாவும் மறைந்து ஏகாந்த நிலையில்
ஐயம் தெளிந்து உண்மை ஆத்மனை அறிந்து
ஒருமைதனை உணரும் உன்னத நிலை அடைந்து
ஓராயிரம் நாமாக்களை ஓதி சரணடைந்த நேரம்
ஒளஷதமும் செய்ய முடியாத புது மாற்றம் தோன்ற
பிறவியில்லா வாழ்க்கையும் இம்மண்ணிலே வந்ததம்மா

எழுதியவர் : கே என் ராம் (25-Jul-21, 12:55 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 29

மேலே