செவ்வல்லிப்பூ - நேரிசை வெண்பா

செவ்வல்லிப்பூ
நேரிசை வெண்பா

செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ(டு)
ஒவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி - இவ்வுலகிற்
கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு
புண்ணின்நோய் பன்னோயும் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

சிறுநீர்நோய், சங்கவாதம், மேக மூத்திரம் வெயிலாற் பிறந்த கண்ணோய்கள், இரத்த பித்தம், புண், தாதுநட்டம் ஆகியவற்றைச் செவ்வல்லிப்பூ நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-21, 3:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே