மஞ்சள் தங்கநிலவு

மாலை நிலவே வந்தாயெ வந்தாயெ...
வெள்ளை நிலவாக நீ..!
இரவெல்லாம் வெளிச்சம் தந்தாயெ தந்தாயெ..
பொன் நிலவாக நீயிருந்து...!

கண்ணும் கண்ணும் பேசி பேசி
காதல் செய்ய வருவாயொ வருவாயொ...

வானம் குளிற வந்த நிலவுபோல
மனம் குளிற வந்த வெள்ளைபூவே நீயெ நீயெ ...

புல்பூண்டு காயும் வெய்யோன் ஒளியில்.....
மீண்டும் துளிரும் பச்சையாய்
யாவும் துளிதூரலில்..

துணை இல்லாமல் வந்தாய் தனித்து
இணைசேர வேண்டும் வேண்டும் என்னுயிரில்..

கதிரவன் வரும் நேரம் பார்த்து
காலை நிலவெ மறைந்தாயெ
மஞ்சள்தங்க நிலவாக நீ...!

மாலைமங்கும் நேரம்
மீண்டும் மீண்டும் வந்து வந்து
ஒளிர வேண்டும்...
இரவெல்லாம் வெளிச்சம்
தர வேண்டும்...
இன்னும் கொஞ்சம் இனிமை
சேர வேண்டும்..

நிலவே...அழகே...
நிலவே...அழகே...

உனது பார்வைஒளியில்
ஆனந்தமெ...ஆனந்தமெ...

எழுதியவர் : BARATHRAJ M (29-Jul-21, 5:07 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 121

மேலே