வாழக்கை

அம்மா, அப்பா.......
அவளுக்கென்று தனி ஆசையில்லை
அவளின்றி அவருக்கு வாழ்க்கையேயில்லை

காதல், திருமணம்........
ஒருவருக்கொருவர் நேசிக்கும்வரை
ஒருவருக்கொருவர் சுவாசிக்கும்வரை

கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் .......
தன்னலம் கருதாத ஒருவர் உள்ளவரை
தன்னலம் கருதும் ஒருவர் உள்ளவரை

சில உறவுகள், சில நட்புகள்........
பண உதவி கேட்கும்வரை
கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும்வரை

முதலாளி, தொழிலாளி ......
முதலுக்காக உழைப்பவர்
முதலாளிக்காக உழைப்பவர்

ஆண் நட்பு, பெண் நட்பு......
ஆயுள்ளவரை வெளிப்படையாய்
ஆயுள்ளவரை மனதுக்குள்

எழுதியவர் : சுப்ரியா பாலசுப்ரமணியன் (29-Jul-21, 4:31 pm)
பார்வை : 208

மேலே