என்ன சொல்கிறது என் நிழல்

நான் சிரிக்கும் போது,
தானும் சிரித்து,
நான் அழும்போது
தானும் அழுது
பிறர் வாழும் வாழ்வை
பிடிக்காமல்,
பிடித்தது போல வாழ்ந்து..
முகம் தொலைத்த
மனித முகங்களோடு
தினம் தவித்து
மனசு இறுகி
ஓசை தொலைத்து
ஏதோ ஓர் புள்ளியில்
திசை தெரியாமல் நின்று
உருக்குலைந்த
உள்ளத்துடன்
உறக்கம் தொலைத்த
விழிகளுடன்
வானத்து நிலவொளியில்
என் முகத்தை வெறித்தபடி…
நிலா நனைந்த இரவில்
நிழலாய் மாறி
மீண்டும்
நிஜத்தை தேடும் போது
அன்பாய், பாசமாய்
நட்பாய், காதலாய்
என்னுள் கலந்த என் நிழல்..
உள்ளம் திறந்து
உள்ளன்போடு
”கலங்காதே நான் இருக்கிறேன்”
எனும்,
ஒற்றை வார்த்தை
மரணித்துப் போன
என் உணர்வுகளுக்கு
மருந்தானது…!
மகிழ்ச்சியானது..!!

-ஸ்ரீவித்யா கலைவாணி
ஆற்காடு.

எழுதியவர் : ஸ்ரீவித்யாகலைவாணி (30-Jul-21, 5:01 pm)
பார்வை : 87

மேலே