உதவி செய்வரை மறக்காதே
கைகள் பரிமாறும் நொடியில் வரமாகும்...!
கருணை நடமாடும் கல்லும் கரைந்துவிடும்...!
தேவை கரஞ்சேரும் சேவை சேர்ந்திருக்கும்...!
மனமும் இளகிவிடும் தினமும் மகிழ்வாகும்....!
உள்ளமும் உவகையால் உயர்ந்து காட்டும்...!
உதவுதல் செயலால்மனம் வானம்போல் பரந்துவிரியும்...!
நம்மின் மகிழ்வு கண்டதுண்டு வாழ்வினிலே...!
நின்மின் மகிழ்வு ஆன்மாவை தொடுவதுண்டு...!
கரங்கொடுக்க கற்றுக் கொண்டால் போதுமிங்கே...!
கடலும் சிறிதாகும் வானமும் எல்லையாகும்...!
நாமும் ஒருதினம் யாரோ ஒருவரால்...!
மேடேற பெற்றிருப்போம் நினைவு கூர்ந்திடுவோம்...!
உதவி மறப்பதுமே உயிரை கொன்றுவிடும்...!
நன்றி கொண்டிருத்தல் மானுட மாட்சியாமே...!
மறத்தல் என்பதென்றால் மதியை இழப்போமே...!
செய்பவரை மறக்காதே செய்பொருள் இருக்காதே...!
வாழ்ந்து பயணில்லை...!
-ஸ்ரீவித்யாகலைவாணி
ஆற்காடு.