நூறு கோடியில் விளையாட யாருமில்லை

இன்றையத் தேதியில் இந்திய மக்களின்
தொகையோ நூற்று முப்பது கோடியாம்
கோடியில் ஒருவரை எடுப்பினும் சிறந்தவர்
தேறுவார் போட்டியில் விளையா டிடவே --- (1)

எவ்வகை விளையாட் டிலேயுமே நளினமாய்
ஆடிட உழைப்புடன் தளர்விலா முயற்சியும்
குறிக்கோ ளெனவரும் ஒருவனே பெரியதாய்
பெறுவான் தரமிகு வெற்றியை உலகிலே --- (2)

தற்குறி மிகுந்தநம் அரசியல் பிறப்புகள்
தரங்குறை அறிவினால் உரமிலா சிலரையும்
பலவனாய் குறிப்பிட் டபடியே இணைத்திட
கிடைக்குமோ எளிதில் வெற்றியும் எதிலுமே --- (3)

காந்தியார் வசனமும் கறைபடா அறிவுமே
பறைசாற் றுதேநலங் குறைந்த நிலையையே
கிராமமே இந்நாடு எழுந்திட உதவிடும்
முதுகெலும் பெனும்மிகு வார்தையை மறப்பதோ --- (4)

உலகமும் வியந்திட நினைத்திடும் எவருமே
சிறந்ததாய் வளர்ந்தே வரும்நம் கிராம
குழந்தைகள் ஏக்கங் கொண்டதாய் உழலும்
திடமிகு எவரையும் செதுக்கினால் சிறப்பே --- (5)
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Jul-21, 6:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 39

மேலே