பெண் எனும் பேராற்றல்
பெண் சாதிப்பவள்
சாதிப்பில் பலவும் போதிப்பவள்..
காற்றைப்போல புகுவாள் வெற்றிடங்களை நிரப்புவாள்..
சூழ்நிலையைப் புரட்டிப்போட்டு
சுயசரிதம் படைப்பாள்..
எண்ணங்களின் வேகத்தை உணர்ந்து எட்டி நுகர்வாள்…..!
காற்றைவிட கடுவேகம் கொண்டு செயல் நிகழ்த்துபவள்…
உலகை உள்ளங்கையில் கொண்டு வர துடிப்பாள்..
அவள் ஓர் போராளி...
அடங்க மறுக்கும் அறிவொளி..
மன முதிவு பெறும்வரை
காத்திருத்திருப்பாள்…..!
கரு முட்டைக்குள் பூத்திருப்பாள்
பூக்கவும் செய்வாள்… !
விழியை விசாலமாக்குவாள் தன்
விடியலை தவிப்புடன் தேடுவாள்..
தடை தாண்டும் நதியவள்
வீழ்ச்சி பெறும் நீர் அவள்..
பாரதியின் காதல் அவள்
பகுத்தறிவின் பரிமாற்றமவள்..
வீரம் விளைந்த மண்ணின்
விளைச்சளவள்..
முறத்தாலே புலி விரட்டிய
என் மூதாதையின் பிறவியவள்..
சிலரால் சிலநேரம்
இவளது கைகள் கத்தியையும் அணைக்கும்..
பலரால் பல நேரம்
அன்பால் அகிலத்தையும் உலுக்கும்..!
ஆயிரம் கோடி தங்க நகை
அணிந்தாலும்….
ஒற்றை மஞ்சள் கயிறுக்கு
மரியாதை கொடுப்பவள்..
மற்றவரை மதிப்பவள்
மானம் கெட்டால் எட்டி மிதிப்பவள்..
அவள் ஓர் பேரூற்று..
குடும்பத்தின் பெருமகிழ்வு..
பெண்தானே நீ என்று
தாழ்வாக நினைக்காதே
தட்டிகழிக்காதே..
அவள் அங்கீகரிக்காவிட்டால்
ஆண்தானே நீயும் இல்லை..
ஆம்..
கோபத்தில் முகத்தை திருப்பிக்
கொள்வாள்..
தன் கொள்கையில் மிகவும் பிடிப்பு கொள்வாள்..
சமாதானத்திற்கு குழந்தையாவாள் சங்கடம் வந்தால் சரமாரி கேட்பாள்..
உணர்வுகொள்ளும் ஆணின்
அன்பை உணர்ந்தவள்..
உணர்வை மெல்லும் ஆண்மைக்கு
அடங்கமறுப்பவள் ...
இறுக்கமிகு சூழலை
இன்ப நிலையாக்கும் இதயமவள்..
கொந்தளிக்கும் மனங்களை
குளிர்விக்கும் நெஞ்சமவள்..
அவளது கனவுகளுக்கு
எல்லையில்லை …!
அவள் நினைவை தடுத்து
தடைப்போட ஆளில்லை...!
அவள் ஓர் பேராற்றல்..
இலச்சியம் உள்ள பெண்ணாக
அவள் இனத்தை அச்சமின்றி
அலச்சியமின்றி….
அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் ஆக்ரோசகாரி..
அகிம்சைவாதி ..அவள்...அவளே…!
-ஸ்ரீவித்யாகலைவாணி… .
ஆற்காடு….