செல்லாக்காசு
பணமே பிரதானம்
என்று வாழும்
மனிதர்களிடம் ..!!
அன்பான உறவுகள்
தடம் தெரியாமல்
போய்விடுகிறது ...!!
பந்த பாசம்
என்பதெல்லாம்
செல்லாக்காசாக
மதிக்கப்படுகிறது ..!!
வசந்த காலங்கள்
போனபின்னால்
பணத்துடன் வாழ்ந்த
காலங்களை நினைத்து
மனிதன் வருந்தும் போது
பணம் மனிதனை பார்த்து
"செல்லாக்காசு"
என்று சொல்லும் ...!!!
--கோவை சுபா