கதவு

வீட்டின் மானம்மறைத்தும்
அம்மணமாகிறது
வாசற்கதவு...!

தச்சன் வீட்டில்
கதவிற்க்குப் பதிலாய்
கோணி...!

உயிர்வாழ
இரத்தபழி கேட்கிறது
இருதயக்கதவு...!

மயானத்தில் மூதாட்டி
முழுவதும் மூடிவிட்டது
இமைக்கதவு...!

அடைக்கப்பட்ட கழிப்பறையிலும்
வரிசையாய் நிற்கிறது
பூட்டியகதவு...!

ஓங்கித் தட்டியும்
திறக்கவில்லை
அகதிக்கு உரிமை...!

திறக்கப்பட்ட கதவு
பூட்டியே இருந்திருக்கலாம்
தந்தைமரணம்...!

எழுதியவர் : தமிழ் வழியன் (1-Aug-21, 9:47 pm)
சேர்த்தது : தமிழ் வழியன்
பார்வை : 46

மேலே