காதல் கொஞ்சுதமிழ் பாடுதடி
எண்ணமெல் லாம்மல் லிகைமலர் பூந்தோட்டம்
உன்விழிபார்த் துப்பார்த்து பூத்துக் குலுங்குதடி
நெஞ்சமெல் லாம்அந்தி மஞ்சள்தூ வக்காதல்
கொஞ்சுதமிழ் பாடு தடி !
----பலவிகற்ப இன்னிசை வெண்பா
எண்ணமெல் லாம்மல் லிகைமலர் பூந்தோட்டம்
கண்கள்பார்த் துப்பார்த்து பூத்துக் குலுங்குதடி
நெஞ்சமெல் லாம்அந்தி மஞ்சள்தூ வக்காதல்
கொஞ்சுதமிழ் பாடு தடி !
----இப்பொழுது இருவிகற்ப (எண் கண் 1 நெஞ் கொஞ் ) இன்னிசை வெண்பா
எண்ணமெல் லாம்மல் லிகைமலர் பூந்தோட்டம்
கண்கள்பார்த் துப்பார்த்துப் பூத்ததடி - வண்ணவிழி
நெஞ்சமெல் லாம்அந்தி மஞ்சள்தூ வக்காதல்
கொஞ்சுதமிழ் பாடு தடி !
--தனிச்ச்சொல் வண்ணவிழி எண்ணமெல் என்ற முதல் சீருடன் எதுகையில்
இயைந்து ஒலிப்பதால் இது இருவிகற்ப நேரிசை வெண்பா