கனிந்த காதல்

பாவையின் மீன்விழிப்
பாவையில் தன்
கம்பீரம் அளக்கும்
காளையை, கண்ணியவள்
தன் ஒளிவீசும்
வசீகர முத்துக்களை
ஜொலிக்கச் செய்து
காளையின் இதயம்
புக முயற்ச்சிக்கும்
சிந்தை அறிந்து
மனம் கனிந்து
மனமுவந்து அவள்
இதயச் சிறையில்
ஆயுல் கைதியாக மாற
சித்தம் கொள்ளும்
காதல் மனம்
கொண்ட தலைவன்!!!

எழுதியவர் : கவி பாரதீ (4-Aug-21, 9:47 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : kanintha kaadhal
பார்வை : 699

மேலே