சாதிய விடுதலை
சாதிய விடுதலை
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
புத்தகத்தில் உள்ள செத்தவன் பெயரில்
சாதியை அழித்து அழிவது என்ன ?
அரசியல் மரத்தின் ஆணிவேர் தேவை
சாதி என்கின்ற தண்ணீர் தானே
அரசு தருகின்ற சான்றுகள் பாரு
அரைப்பக்கத் தகவல் சாதிகள் பேரு
சாதனை ஏதும் புரியாமல் கிடைக்கும்
சாதிக்கென்றே தனிச்சான்று வழக்கம்..
நாடுகளுக்கிடையேயும் சாதியப் பிரிவு
மொழிகளுக்குள்ளேயும் அதுவந்து அமர்வு
மக்கள் மனங்களில் மறைபடும் சாதி
மலர வைப்பது இடஒதுக்கீடு சேதி
சாதிச் சுவரின் சாயம் மங்க -சிறு
சண்டை போதும் வெள்ளை அடிக்க..
வேறோடு அனைத்தையும் பிடுங்காமல்
விதையோடு சேர்த்து எரிக்காமல்
வாயில்லாப் பூச்சி புத்தகத்தில் மட்டும் வந்திருக்கும் மலர்ச்சி மொத்தத்தில் சொல்வது
முடியை வெட்டி உயிரை மாய்க்கும்
முயற்சி என்பதே சாலப் பொருத்தம்.
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔