வாழ்க்கை

வாழ்க்கை வாழ்க்கை;
வாங்கிவந்த வரனே; வாழ்க்கை.
வாழ்க்கை ஒரு வாடிக்கை;
வீழ்ந்தால் வேடிக்கை.

பழகிப்போன வாழ்க்கை;
பாழாப்போன வாழ்க்கை.
படுத்தாது விடாது இந்த வாழ்க்கை;

பாசம்நிறைந்த வாழ்க்கை;
பகை தீர்க்க துடிக்கும் வாழ்க்கை.

வழக்கில் விழுந்த வாழ்க்கை;
வருத்தம் நிறைந்த வாழ்க்கை;
வறுமையும் வசதியும் கொண்ட வாழ்க்கை;
மர்மம் நிறைந்த வாழக்கை;
மரணத்தில் விழும் வாழ்க்கை;
பொருத்தம் நிறைந்த வாழக்கை;
போனல் திரும்பி வராத வாழ்க்கை.

வாழ்க்கை வாழ்க்கை வாழ்கை;
பயணம்செய்யும் வாழ்க்கை;
பழகிப்போன வாழ்க்கை;
பயம் நிறைந்த வாழ்க்கை;
பணம்இல்லை என்றால்;
பயன் அற்ற வாழ்க்கை.


வாழ்க்கை வாழ்க்கை,
எங்கும் இங்கே வேடிக்கை,
வாழக்கையே ஒரு, வானவேடிக்கை.

வாழத் தெரிந்தவன்;
நெறிபடுத்துவான் வாழ்க்கையை;

வாழ்க்கை வாழ்க்கை,
வாழத்தெரியாவிட்டால்;
வேடிக்கை, வேடிக்கை,
வெகுளி சுமப்பான்
வெள்ளத்தியான வாழ்க்கை.
வெறிபிடித்தவன் தொடர்வான்;
வீணான வாழ்க்கை.

வாழத் தெரிந்தவன்;
வாழ்வான் வாழ்க்கை.

திறமை படைத்தவன்,
திருத்தி அமைப்பான் வாழ்க்கையை.
திருட்டு புத்தி உள்ளவன்,
திண்டாடுவான் வாழ்க்கையில்.


வாழ்க்கை வாழ்க்கை,
வயிற்றுப் பிழைப்பிற்கான வாழ்க்கை,
வயோகத்தில், பிணியில் சிக்கும் வாழ்க்கை.

நோயாளி வாழ்வான்,
நோவுற்ற வாழ்க்கை.
சிரித்தே வாழ்பவன் வாழ்வான்,
நோய்நொடி இல்லாத
நோயற்ற வாழ்க்கை

பாவத்தை சுமக்கும் வாழ்க்கை,
பழுதான வாழ்க்கை;
பழகிப்பார்த்தால்,
புளித்துப்போகும் வாழ்க்கை.

சீ சீ என்று வெறுக்கும்,
வாழ்க்கை.

கசப்பான வாழ்க்கை;
கசங்கிப்போன வாழ்க்கை;

அந்த வாழ்க்கை,
அலட்சிய வாழ்க்கை,
அபலவாழ்க்கை,

இலட்சிய வாழ்க்கை,
இனித்திடும் இழிபடாத
வாழ்க்கை.

அழகான வாழ்க்கை,
அடக்கமான வாழ்க்கை;
அன்பான வாழ்க்கை,
ஆனந்தமயமான வாழ்க்கை,
இன்பமயமான வாழ்க்கை.

அடக்கம் இல்லாத வாழ்க்கை,
ஆட்டம் காட்டும் வாழ்க்கை.

ஆடம்பரமான வாழ்க்கை,
அசிங்கமானவாழ்க்கை,
ஆபத்தான வாழ்க்கை.

இருக்கமான வாழ்க்கை,
ஈனமான வாழ்க்கை.

உருக்கமான வாழ்க்கை,
உண்மையான வாழ்க்கை.

இறக்கமில்லாத வாழ்க்கை,
இழவு வாழ்க்கை.
உறக்கமில்லாத வாழ்க்கை,
உழட்டும் வாழ்க்கை.

விரக்தியான வாழ்க்கை,
விடியாத வாழ்க்கை.

துன்பமான வாழ்க்கை,
தோல்வியுற்ற வாழ்க்கை,
சோகமான வாழ்க்கை

வறுமையானாலும்,
வைராக்கியமான வாழ்க்கை,
வசந்தமான வாழ்க்கை.

வறுமையோ பகைமையோ
வாழ்ந்து காட்டு

வாழ்க்கை ஒரு விளக்கு
விலகிப்போனால் வரும் வழக்கு.

வாழ்க்கை ஒரு விபத்து,
வந்தவன் போவதும் வழக்கு.

வாழ்க்கை ஒரு வெறுப்பு,
உனக்கு வேண்டும் பொறுப்பு.

வாழக்கை ஒரு பசப்பு;
பசையாக ஒட்டாமல் இருந்தால் சிறப்பு.

வாழ்க்கை ஒரு அரிது;
வாழ்ந்து காட்டினால் பெரிது.

வாழ்க்கை ஒரு அழகு,
வாழ்ந்து காட்டுபவனுக்கு,
அது புதியது.

வாழ்க்கை வலியது,
வாழத் தெரியாதவனுக்கு,
வாழ்க்கை கொடியது.


வாழ்க்கை வாழ்க்கை வாழ்க்கை,
வருவது வரட்டும் வாழ்ந்து காட்டு;
வாழ்க்கைத் தோல்வியை,
வீழ்த்திக்காட்டு.


நாட்கள் நகரும்,
நாளையும் புலரும்,
நம்பிக்கைத்தான் வாழ்க்கை,

மர்மம் நிறைந்த வாழ்க்கை,
மரணத்தில் முடியும் வாழ்க்கை.

வாழ்க்கை வாழ்க்கை,
வந்து போவதே வாழ்க்கை.

விலைமதிப்பற்ற வாழ்க்கை
விளகாத துன்பம் என்று எதுவும் இல்லை



+

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (6-Aug-21, 9:29 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 246

மேலே