கேட்கவும் விருப்பமில்லை
கேட்கவும் விருப்பமில்லை..
அவனே சொன்னான் .
"காலவாசல் , பெரியாரு "
சன்னமாக போய் அமர்ந்து கொண்டேன்
தரை சீட்டில்.
இடம் வந்தவுடன் யவரையும் தொந்தரவு செய்யாமல் இறங்கி விடலாம்..
மூன்றாம் நிறுத்தம் வந்தது
இரண்டு CBSE பள்ளி சிறுவர்கள் ஏற்றம்.
கருப்பாக ஒருவன் , அவனை விட கலர் என்று சொல்லிக்கொள்ளும்படி இன்னொருவன்.
இருவர், புத்தகப்பை , உணவுப் பொட்டலம் , நான்.
மேலே ஒரு அக்காள்
மதிக்கத்தக்க பெண்மணி.
அடுத்த நிறுத்தம் ஆள் ஏற்றம்
"தம்பி மெல பொய் உக்காருப்பா "
ஓட்டுநர் இருவரை நோக்கி.
இம்மியளவும் நகரவில்லை.
சற்றும் யோசிக்காமல் அக்காளின் அருகில் நான் அமர்ந்தேன்.
ஆட்செபித்ததாகத் தெரியவில்லை.
எனக்கு வயதாகிப் போனதை உணர்ந்தேன்
கூச்சமின்மையும் , எதையும் பொருட்படுத்தாத நிலையும் அதன் அறிகுறிகள்.
அந்த இருவர் பேசுவதை ஒட்டுக் கேட்டேன்.
வயதை பாதியாக குறைத்து பார்க்க...
எதுவும் விளங்கவில்லை ஏதோ ஒரு வீடியோ கேம் பற்றிய ஒரு கலந்துரையாடல்.
அடுத்த நிறுத்தம் பெண் ஏற்றம்
இப்போது நான் குழப்படியில்.
அந்த அக்காள் இன்னும் வயதை உணரவில்லை போல, என்னருகில் அமர யோசித்தப்படியே தயங்கினாள்.
இப்போது வயதை பல மடங்கு குறைத்தேன்
ஆட்டோக்காரன் தன் இருக்கையில் பாதியை எனக்களித்தான் .
பரிமாணங்கள் பணமாகத் தோன்றியது.
" னே ஆலமரம் இறங்கனும்னே"
அடுத்த நிறுத்தம் ஆள் இறக்கம்