பாசவலை

வினாடி நேரம்
விழி மூடினாலும்
விழிப் பாவையுல்
வின்மீனாக ஜொலிக்கின்றாய்....

கண்ணயரும் வேளையெல்லாம்
கண்ணசைத்து வந்து
காதல் மொழிபேசி
கட்டவிழ்த்து விடுகிறாய்யென்
காதலை.....

நாளனன்று ஆசையுடன்
நான் உனை
நெருங்கும் வேளையில்
நங்கை நீ விழியுருத்து
நன்விழியால் தீ உமிழ்வாய்
நடுவீதியில்.....

மனம் கொள்ளா காதலுடன்
மணக்க உனை கேட்டபோது
மங்கை நீ, புற அழகை
மனதிற் கொண்டு எனை
மறுத்தாய்.....

புற அழகிற்கு மயங்கி
புகழ் உச்சியில் இருக்கும்
புருஷனைத் தேடி, உன்
புன்னகையை விலையாக்கி
புழுதியில் விழுந்த
பூவாக மாறினாய்.....

பெரும் நடிகனென்று நம்பி
பெரு வாழ்வு வாழ
பெருமையுடன் அவன் கைப்பிடித்தாய்....
பெண்ணென்று பாராமல்
பெட்டை அவன் உனை
பெருங் கொடுமை செய்தானே....

உன் விழிகளின்
உயிர்துடிப்பை காண
ஊன் உறக்கம்
உதிர்திருந்த நாட்களும் உண்டு.
உருத்துயெனை விழித்தாலும், அதையும்
உற்று ரசிக்காமல் இருந்ததில்லை....

ஒளியற்ற வெறுமை விழியை
ஒருபொழுதும் காணமனம் நோவுதடி...
ஒரு கணப்பொழுதும் நிலையாது
ஒன்றொன்றாக பயனிக்குமே....
ஒன்பது வட்டம் அடித்து நொடியில்
ஓடிவரும் சக்கரமாக சுழலுமே....

பன்முகம் காட்டுவோர் மத்தியில்
பாசத்தில் மற்றற்று
பண்பிலும் சிறந்தவனாக
பசப்பற்ற பேச்சும்...
படிப்பறிவில் உச்சம் தொட்டும்
பகட்டில்லா வாழ்க்கையும்
பார்த்து யென்மீது
பாசம் அற்று போனாயோ?

மகாநடிகன் தான் நானும்
மங்கை உனை
மனதில் வரித்த நாள்தொட்டு
மனம் கவர்ந்தவள்
மானம் காக்க மற்றவர்க்கு
மனதை மறைத்து
மனதோடு வாழும் நானும்
மகாநடிகன் தான்......

எழுதியவர் : கவி பாரதீ (7-Aug-21, 12:23 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 466

மேலே